கோலாலம்பூர், அக்டோபர்.30-
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் டத்தோ ஶ்ரீ முகமட் அட்லான் பெர்ஹான் இருக்கும் இடம் குறித்து புதிய துப்பு கிடைத்துள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
ஒரு வர்த்தகரான முகைதீனின் மருமகனைக் கண்டுபிடிப்பதிலும், நாட்டிற்குக் கொண்டு வருவதிலும் அனைத்து வகையான முயற்சிகளும் நடந்து வருவதாக சைஃபிடின் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த வர்த்தகரை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு இண்டர்போல் போலீசாருடன் நல்லதொரு தொடர்பு கொண்டுள்ள அரச மலேசிய போலீஸ் படை மூலம் உள்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக அவர் மேலும் கூறினார்.








