புத்ராஜெயா, ஆகஸ்ட்.20-
கேங் பூடாக் செகோலா என்று அழைக்கப்படும் கும்பல் ஒன்றின் பாலியல் குற்றங்களுக்குப் பின்னால் மூளையாக இருந்து செயல்படுவதாகக் கூறப்படும் தரப்பினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இது பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரமாக இருப்பதால் இதன் மீதான விசாரணையை மிகக் கவனமாகக் கையாள வேண்டியுள்ளது என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.
பள்ளிப் படிப்பைப் பாதிலேயே முழுக்குப் போட்டு விட்டு வெளியேறத் துடிக்கும் மாணவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இதனை மிகக் கவனமாகக் கையாளப்படும் வேளையில் கேங் பூடாக் செகோலா கும்பலுக்குப் பின்னால் மூளையாக இருந்து செயல்படும் தரப்பினரைப் போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக சைஃபுடின் தெரிவித்தார்.








