சிரம்பான், அக்டோபர்.24-
கடந்த திங்கட்கிழமை, பேருந்தில் 16 வயது பெண்ணிடம் சில்மிஷம் புரிந்த நபருக்கு சிரம்பான், செஷன்ஸ நீதிமன்றம் இன்று 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
மண்வாரி இயந்திர ஓட்டுநரான 47 வயது S. குணா என்பவர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி டத்தின் சுரிதா புடின் இத்தண்டனையை விதித்தார்.
குணா பிடிப்பட்ட தீபாவளி தினத்தன்று, முதல் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
சிறை வாசம் முடிந்த பின்னர், அந்த நபர், ஓராண்டு காலம் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதுடன், அவருக்கு நல்லுரை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி ஆணை பிறப்பித்தார்.
கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி ரெம்பாவ், போங்கேக் என்ற பகுதியில் தம்பினிலிருந்து ரெம்பாவிற்கு செல்லும் பேருந்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








