Jan 24, 2026
Thisaigal NewsYouTube
அகமட் ஜாஹிட் விடுவிப்பு, விளக்கம் கோருவதற்கு முன்னாள், இந்நாள் சட்டத்துறை தலைவர்களுக்கு அழைப்பாணை
தற்போதைய செய்திகள்

அகமட் ஜாஹிட் விடுவிப்பு, விளக்கம் கோருவதற்கு முன்னாள், இந்நாள் சட்டத்துறை தலைவர்களுக்கு அழைப்பாணை

Share:

துணைப்பிரமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் வழக்கில் விடுவிக்கப்பட்டது தொடர்பில் சட்டத்துறை தலைவர் டத்தோ அகமது டெரிருடின் முகமட் சலே மற்றும் முன்னாள் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ இட்ருஸ் ஹருன் ஆகியோர் விளக்கம் அளிப்பதற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

மனித உரிமை, பொதுத் தேர்தல் மற்றும் சீர்திருத்தங்கள் மீதான மனித உரிமை சிறப்புக்குழு, அவ்விரு சட்டத்துறை பொறுப்பாளர்களுக்கும் அழைப்பாணை அனுப்பி, யயாசன் அகல்புடி அறவாரிய வழக்கில் 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் துணைப் பிரதமர் எவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக அதன் தலைவர் வில்லியம் லியோங் ஜீ இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News