Jun 30, 2026
Thisaigal NewsYouTube
துன் டாக்டர் லிங் லியோங் சிங்கிற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் இறுதி அஞ்சலி
தற்போதைய செய்திகள்

துன் டாக்டர் லிங் லியோங் சிங்கிற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் இறுதி அஞ்சலி

Share:

மறைந்த முன்னாள் மசீச தலைவர் துன் டாக்டர் லிங் லியோங் சிக்கின் உடலுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

நாட்டின் வளர்ச்சிக்கு டாக்டர் லிங் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், குறிப்பாக அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட முக்கிய மாற்றங்களையும் மைல்கற்களையும் நினைவு கூர்ந்தார்.

தனது குடும்பத்தின் சார்பிலும், அரசாங்கத்தின் சார்பிலும் டாக்டர் லிங்கின் மனைவி தோ புவான் ஓங் ஈ நா மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

மேலும், தசாப்த கால நட்பு குறித்துப் பேசிய அன்வார், தான் பினாங்கில் இருந்த காலத்திலிருந்தே டாக்டர் லிங்கை நன்கு அறிவேன் என்றார். பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்கு அருகிலுள்ள முன்பு மாத்தா கூச்சிங் என்று விளங்கிய பகான் தொகுதியில் டாக்டர் லிங் சேவையாற்றியபோது, இருவரும் இணைந்து அரசியலில் பயணித்த இனிமையான நினைவுகளையும் அன்வார் பகிர்ந்துகொண்டார்.

Related News