மலாக்கா, ஜூலை.23-
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று நம்ப்படும் ஒரு காதல் ஜோடியைப் போலீசார் சுமார் 13 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்தனர்.
26, 28 வயதுடைய அந்த காதல் ஜோடியை நேற்று மாலை 6 மணியளவில் மலாக்கா, லோரோங் பண்டான், தாமான் அனிகாவில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி வீட்டுப் பகுதியிலிருந்து ரோந்து போலீஸ் காரில் விரட்டிய வண்ணம் 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாமான் புக்கிட் ரம்பாயில் ஜாலான் தெருனாவில் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
பெரோடுவா மைவி காரில் சென்ற அந்த காதல் ஜோடியை விரட்டும் போது போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் பிடிப்பட்டது மூலம் லுட்சினார் வகையைச் சேர்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








