சிரம்பான், டிசம்பர்.27-
சலுகை விலையில் பெட்ரோல் ரோன் 95 எரிபொருளை வாங்கும் பூடி95 திட்டத்தில் மற்றவருக்குச் சொந்தமான மைகாட் அட்டையைப் பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
தமக்குத் தெரியாமலேயே தம்முடைய மைகாட் அட்டைப் பயன்படுத்தப்பட்டு, நெகிரி செம்பிலான், கெமெஞ்சே எண்ணைய் நிலையத்தில் பெட்ரோல் வாங்கப்பட்டு இருக்கிறது என்று மைகாட் அட்டை உரிமையாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து 42 வயதுடைய அந்த நபரைத் தேசிய பதிவு இலாகாவாஆன ஜேபிஎன் அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அந்த நபர், நெகிரி செம்பிலான், சுங்கை லேரெக், கம்போங் பிபிஆர்டி குடியிருப்புப் பகுதியில் கைது செய்யப்பட்டதான ஜேபிஎன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.








