Sep 26, 2026
Thisaigal NewsYouTube
புடி டீசல் தகுதியை உண்மையான வாகனப் பயனீட்டாளருக்கு மாற்றலாம்
தற்போதைய செய்திகள்

புடி டீசல் தகுதியை உண்மையான வாகனப் பயனீட்டாளருக்கு மாற்றலாம்

Share:

புடி டீசல் திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள தனியார் டீசல் வாகனங்களின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள், அந்தத் தகுதியை தற்போது வாகனத்தை உண்மையில் பயன்படுத்தும் மற்றொருவருக்கு மாற்றிக் கொடுக்கலாம்.

இந்தப் புதிய நடைமுறை செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது வாகனத்தை உண்மையில் பயன்படுத்தும் வேறு எந்த நபருக்கும் தகுதியை மாற்ற முடியும்.

எனினும், பெயர் குறிப்பிடப்படும் நபர் மலேசியக் குடிமகனாகவும், மைகார்டு வைத்திருப்பவராகவும், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும், புடி95 பெறுவதற்கான தகுதியைக் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

மேலும், அந்த நபர் சம்பந்தப்பட்ட டீசல் வாகனத்தை உண்மையில் பயன்படுத்துபவர் என்பதைப் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு முன்னர் இந்தத் தகுதியை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே மாற்ற முடிந்த நிலையில், தற்போது வாகனத்தின் உண்மையான பயனீட்டாளர் என்ற அடிப்படையில் அந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Related News