Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இறக்குமதி அரிசி விலை குறைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இறக்குமதி அரிசி விலை குறைப்பு

டிச. 8-

இதனிடையே, மலேசியாவில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. 10 கிலோ அரிசியின் விலை ஒரு ரிங்கிட் 50 சென் முதல் 2 ரிங்கிட் வ்ரை வரை குறைந்துள்ளது அதே சமயம், 5 கிலோ எடை கொண்ட இறக்குமதி அரிசியின் விலை 70 சென் முதல் ஒரு ரிங்கிட் வரை குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த விலை குறைப்புக்கு முக்கிய காரணம், இந்திய அரசாங்கத்துடன் மலேசியா நடத்திய பேச்சுவார்த்தையாகும். இந்த பேச்சுவார்த்தையின் மூலம், மலேசியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கடைகளில் இறக்குமதி அரிசியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சில கடைகளில் 10 கிலோ அரிசியின் விலை 38 ரிங்கிட்டில் இருந்து 36 ரிங்கிட் 50 சென்னாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி அரிசியின் விலை குறைந்திருந்தாலும், உள்நாட்டு அரிசி விலையில் மாற்றமோ அல்லது கையிருப்பில் தட்டுப்பாடோ ஏற்படாது என வியாபாரிகள் நம்புகின்றனர். இதனால், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான அரிசிகள் வாங்குவதற்கான தேர்வுகள் கிடைக்கும் எனக் குறிப்பிடுகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →