கூச்சிங், அக்டோபர்.30-
கடந்த சனிக்கிழமை கூச்சிங் தபுவான் ஜெயாவில் காணாமல் போனதாகப் புகார் செய்யப்பட்ட பெண்ணின் சடலம், ஒரு பேரங்காடி மையத்தின் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடத்தில் ஒரு காருக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்த சடலம் காருக்குள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூச்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் அலெக்சன் நாகா அனாக் சாபு தெரிவித்தார்.








