கோலாலம்பூர், செப்டம்பர்.02-
இரண்டு முதலீட்டு ஏஜெண்டுகளிடமிருந்து தனது மனைவி டத்தின் ஶ்ரீ ஸிஸி ஏ. சாமாட், 28 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று சர்ச்சைக்குரிய அரசியல்வாதியும், கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.
அதே வேளையில் 2015 ஆம் ஆண்டில் இரண்டு ஏஜெண்டுகளிடமிருந்து 28 லட்சம் ரிங்கிட் ரொக்கத்தைப் பெறுமாறு தனது மனைவியைக் கேட்டுக் கொள்ளவில்லை என்று புங் மொக்தார் கூறினார்.
தாமும் தனது மனைவியும் 28 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக அவ்விருவருக்கு எதிராக நடைபெற்று வரும் லஞ்ச ஊழல் வழக்கில் எதிர்வாதம் புரிய உத்தரவிடப்பட்டுள்ள புங் மொக்தார், இன்று முதல் முறையாக சாட்சியம் அளிக்கையில் மேற்கண்ட வாதத்தை முன் வைத்தார்.








