ஈப்போ, டிசம்பர்.15-
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி சிம்பாங் பூலாயில் காருக்குள் கத்திக் குத்துக் காயத்துடன் இறந்து கிடந்த ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிப்பதற்கு முன்பு, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் துப்பாக்கியினால் சுட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை போலீசார் தொடர்ந்து தேடி வருவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது. புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் மற்றும் சில அமலாக்க ஏஜென்சிகளின் உதவியுடன் அவர் தேடப்பட்டு வருவதாக டத்தோ நூர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தில் காயமுற்ற சரவா மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ்காரரின் நலனைக் கருத்தில் அவர் பிறந்த மாநிலத்திற்கே இடம் மாற்றப்பட்டுள்ளதாக டத்தோ நூர் மேலும் தெரிவித்தார்.








