Mar 29, 2026
Thisaigal NewsYouTube
KK SUPER MART மீண்டும் ஒரு முறை மகத்தான விருதை வென்றது
தற்போதைய செய்திகள்

KK SUPER MART மீண்டும் ஒரு முறை மகத்தான விருதை வென்றது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 23-

நாட்டின் முன்னணி சங்கிலித்தொடர்பு வர்த்தக நிறுவனமான KK SUPER MART “ The Great Asia Outstanding Corporation Award” ஆசிய நிறுவனத்துறைக்கான மகத்தான விருதை வென்று, மீண்டும் சாதனைப்படைத்துள்ளது.

அண்மையில் கோலாலம்பூர், Royale Chulan-னில் நடைபெற்ற ஆசிய பொருளாதார மற்றும் தொழில்முனைவோர்களுக்கான உச்ச நிலை மாநாட்டில் இந்த உயரிய விருதை KK SUPER MART வென்றது.

மலேசியாவில் மட்டுமின்றி பிராந்திய ரீதியாக அனைத்துலக அளவில் சில்லரை வர்த்தகத்தில் கால்பதித்து, இன்று அபரிமித வெற்றியை நோக்கி பீடு நடைபோட்டு வரும் KK SUPER MART –டின் தொடர் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

KK SUPER MART- டின் தோற்றுநரும், தலைவருமான Datuk Seri Dr KK Chai, கூறுகையில், தனித்துவமான இந்த விருதை வென்றது, ஒரு தனி நபரின் சாதனை அல்ல, KK SUPER MART- குழுமத்தின் ஒட்டுமொத்தக்குழுவின் கடின உழைப்பாகும், சாதனையாகும் என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார்.

KK SUPER MART, எப்பொழுதுமே நிறுவனத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து வருகிறது.

பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள், சமயத்தவர்களை உள்ளடக்கிய மலேசியாாவின் தனித்துவமானது, தம்மைப் போன்ற தொழில்முனைவர்களின் வெற்றிக்கு பங்களிப்பை வழங்கி வருகிறது என்று Datuk Seri Dr KK Chai குறிப்பிட்டார்.

தவிர மலேசியர்களின் பன்முகத்தன்மையும், ஒற்றுமையும் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளை திறந்துள்ளதாக Datuk Seri Dr KK Chai பெருமிதம் தெரிவித்தார்.

KK SUPER MART நிறுவனத்திற்கான இந்த உயரிய விருதை, நாட்டின் துணைப்பிரதமரும், எரிசக்தி, உருமாற்றம் மற்றும் நீர் துறை அமைச்சருமான Datuk Seri Fadilah Yusof- பிடமிருந்து Datuk Seri Dr KK Chai பெற்றார்.

Related News