Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணுக்குக் கொலை மிரட்டல்: பி-ஹெய்லிங் ஓட்டுநர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டு
தற்போதைய செய்திகள்

பெண்ணுக்குக் கொலை மிரட்டல்: பி-ஹெய்லிங் ஓட்டுநர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டு

Share:

கடந்த வாரம் 24 வயது பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில், 36 வயது பி-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவருக்கு எதிராக இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மது போதையில் இருந்ததாக கூறப்படும் ஏ. வினோத்வர்மா என்ற அந்த ஓட்டுநர், கடந்த மே 22-ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில், சிகை அலங்காரப் பணியாளரான அஷா பேகம் என்ற பெண்ணிடம், தான் வாங்கித் தந்த பரிசுக்கான பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு வசைபாடியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் ஃபரா நபீஹா டான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட வினோத்வர்மா, தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விாசரணை கோரினார்.

வினோத்வர்மா தாயாரின் உடல்நிலை மற்றும் தந்தையின் மாற்றுத்திறனைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அவருக்கு 4 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்