தஞ்சோங் மாலிம், ஆகஸ்ட்.04-
இரு லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்தினால் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 372.1 ஆவது கிலோமீட்டரில், சுங்கையிலிருந்து ஸ்லிம் ரிவர் வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனப் போக்குவரத்து நிலைக் குத்தியது.
இந்தச் சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் நிகழ்ந்தது. கோழி முட்டைகளை ஏற்றி வந்த லோரி ஒன்று, சிமெண்ட் லோரியின் பின்புறம் மோதியது. இதில் இருவர் கடும் காயங்களுக்கும், மேலும் இருவர் சொற்பக் காயங்களுக்கும் ஆளாகியிருப்பதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சாலைப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பதை மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் தனது முகநூலில் உறுதிப்படுத்தியது.








