மலேசிய தங்க ஆபரணங்கள் சந்தையில் தங்கத்தின் விலை கிராமிற்கு 300 வெள்ளியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்துள்ள பலர், தாங்கள் வாங்கிய தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளனர் என்று தங்க வியாபாரிகள் கூறுகின்றனர். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் பத்து லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள தங்க ஆபரங்ணங்களை தாங்கள் மீண்டும் விலைக்கு வாங்கியதாக ஈப்போவில் உள்ள ரோசித்தா நகைக்கடையின் பிரதிநிதி ஒருவர் கூறுகிறார்.
கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகையாக , தங்கப் பாலமாக வாங்கிய தங்க ஆபரங்ணங்களை விற்பதிலும், வாங்குவதிலும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று ஈப்போவை சேர்ந்த கெடாய் எமாஸ் ரோசித்தா நகைக்கடையின் பிரதிநிதி ஃபிக்கீர் மர்சூகி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வார காலமாக தங்கள் நகைக்கடையில் குவிந்துள்ள வாடிக்கையாளர்களில் பாதிப்பேர் நகைகளை விற்க வந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








