கோலாலம்பூர், பிப்ரவரி.22-
கோலாலம்பூர், செராஸ் பகுதியில் உள்ள பிளட் ஶ்ரீ மலாக்கா குடியிருப்பில் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவரை கத்தியால் தாக்கி காயப்படுத்திய 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரைப் காவற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தின் போது, ஆவேசமாக இருந்த அந்த இளைஞரை அமைதிப்படுத்த முயன்ற நபரின் இடது கையில் கத்தி வெட்டு விழுந்ததில் அவருக்கு 3 சென்டி மீட்டர் அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக செராஸ் மாவட்டக் காவற்படையின் தலைவர் உதவி ஆணையர் முஹமட் ரொஸ்டி டாவுட் தெரிவித்தார்.
பிடிபட்ட அந்த இளைஞர் மீது ஏற்கனவே 10 குற்றப் பின்னணிகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், அவர் தற்போது நான்கு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆயுதத்தால் காயப்படுத்துதல் எனும் சட்டப் பிரிவின் கீழ் காவற்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








