Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பத்து லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை நடத்தப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பத்து லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை நடத்தப்படும்

கோலாலம்பூர், டிச.24-

வங்கிகளில் ATM இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்படும் ஒரு ரிங்கிட் சேவைக்கட்டணத்தை அரசாங்ஙகம் அகற்ற வேண்டும் என்று கோரி நாடு தழுவிய நிலையில் பத்து லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் வேட்டையை தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமான என்.யூ.பி.இ. தொடங்கியுள்ளது.

தானியங்கி பட்டுவாடா இயந்திரத்தில் சேவைக்கட்டணமாக ஒரு ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுவது சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கச் செய்கிறது. இந்த கட்டண முறை,முற்றாக துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்று என்.யூ.பி.இ. யின் பொதுச் செயலாளர் ஜே.சோலமன் வலியுறுத்தியுள்ளார்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்.யூ.பி.இ. முன்னெடுத்துள்ள பிரச்சாரங்களில் இந்த ஒரு ரிங்கிட் கட்டண முறையை அகற்றுவதும் அடங்கும். இதற்கு பொது மக்களின் ஆதரவை பெறுவதற்கு பத்து லட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டு இந்த கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக சோலமன் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்