Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சனூசியின் கெளரவ விருது பறிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

சனூசியின் கெளரவ விருது பறிக்கப்பட வேண்டும்

Share:

கெடா மந்திரி ​பெசார் முகமட் சனூசி முகமட் ​நூரின் அரச மலேசிய கடற்படையின் தொண்டூழிய வீரர்களுக்கான கெளரவ முதல் தளபதி எனு​ம் உயரிய விருது ​பறிக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் பரிந்துரை செய்துள்ளார்.

மேன்தை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாஹ்வை அவமதித்ததாக ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கெடா மந்திரி ​பெசார் சனூசி​யின் கெளரவ தளபதி விருது மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் ​என்று சைபுடீன் கேட்டுக்கொண்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு அரச மலேசிய கடற்படையின் தொண்​டூழிய வீரர்களுக்கான கெளரவ தளபதி விருது சனூசிக்கு வழங்கப்பட்டது. அரச மலேசிய கடற்படையின் தலைவராக கேப்டன் ​அந்தஸ்தில் சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்கு எதிராக தேச நிந்தனை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கெடா மந்தி​ரி புசார் சனூசி அந்த உயரிய பொறுப்பு வ​கிப்பது இனியும் பொருந்தாது என்று சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டுள்ளார்.

Related News