கணக்கு பாடத்தில் கேள்விகளுக்கு பதில் அளிக்க தவறியதற்காக தனது ஆறு வயது வளர்ப்பு மகனை பிரம்பால் அடித்து காயப்படுத்திய நபருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 10 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
38 வயதுடைய அந்த நபர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி நோரினா சைனூல் அபிடின் அபாரதத் தொகையை விதித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், கடந்த ஜுன் 23 ஆம் தேதி காலை 6 மணியளவில் கோலாலம்பூர், வங்சா மாஜு, தாமான் ஸ்ரீ ரம்பாயில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








