Oct 16, 2026
Thisaigal NewsYouTube

14 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
14 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர்

நவ. 17-

சிறுவர்களும் இளையோர்களும் குண்டர் கும்பல்களில் சேர காரணம் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைத்துக் கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் பாதுகாப்புக்காக இது போன்ற குண்டர் கும்பல்களில் சேர்கின்றனர் என்று கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை Salak Selatan, Sungai Besi வட்டாரத்தில் நடந்த அதிரடி சோதனை நடவடிக்கையில், 61 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 14 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர்.

இந்த மாணவர்கள் தங்கள் பள்ளியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நினைத்து இந்த குண்டர் கும்பல்களில் சேர்கின்றனர். அவர்கள் தாக்கப்பட்டால் இந்த கும்பல் தங்களுக்கு உதவும் என்றும் நம்புகின்றனர்.

பள்ளிகளில் ஏற்படும் பிரச்சனைகளாலும் கபாதுகாப்பு இல்லாத சூழலும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இது குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனமாக இருக்க வேண்டும் என Datuk Rusdi Mohd Isa வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →