கோலாலம்பூர், டிசம்பர்.22-
மூத்த இராணுவ அதிகாரி ஒருவரின் வங்கிக் கணக்குகளில் பெரிய அளவிலான பணப் புழக்கம் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்ெம் தயாராக உள்ளது என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின்படி, ஒரு மூத்த இராணுவ அதிகாரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் பெருமளவிலான பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான புகார்கள் நம்பகமான ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால், அது குறித்து எஸ்பிஆர்எம் நிச்சயம் விசாரணை நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை அதிகாரப்பூர்வமான புகார் எதுவும் கிடைக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆதாரங்களுடன் முன்வந்தால் ஆணையம் தொழில்முறை ரீதியில் விசாரணை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








