தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் நேற்று மாலை 4.20 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேங்காக்கில், சியாம் பராகோன் பேரங்காடி மையத்தில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த வேளையில் , இதர ஐவர் படுகாயத்திற்கு ஆளாகினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நடப்பு நிலவரங்களை தாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருவதாக தாய்லாந்திற்கான மலேசியத் தூதர் டத்தோ டாக்டர் சமுவல் தெரிவித்துள்ளார்.பேங்காக்கின் மயப்பகுதியில் விற்றிருக்கம் சியாம் பரகோன் பேரங்காடி மையம், வெளிநாட்டு சுற்றுப்பயணிக்ள அதிகளவில் வருகை தரும் பகுதியாகும். அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அந்த பேங்காடி மையத்தின் வருகையாளர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியினால் சுட்டதாக கூறப்படுகிறது.








