Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மைத்துனரைத் துப்பாக்கியால் சுட்டதாக இறைச்சி வியாபாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மைத்துனரைத் துப்பாக்கியால் சுட்டதாக இறைச்சி வியாபாரி மீது குற்றச்சாட்டு

Share:

செலாயாங், அக்டோபர்.10-

பத்துகேவ்ஸ் காட்டுப் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தனது மைத்துனரைக் கவனக்குறைவாக துப்பாக்கினால் சுட்டு, மரணம் விளைவித்ததாக இறைச்சி வியாபாரி ஒருவர் , செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

33 வயது ஸையிட் ஸாகாரியா என்ற அந்த இறைச்சி வியாபாரி, மாஜிஸ்திரேட் சப்ரீனா பாக்கார் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவரின் மூத்த சகோதரியும், இறந்தவரின் மனைவியுமான மாதுவும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு 8 மணியளவில் பத்துகேவ்ஸ், தாமான் பிங்கிரான் வனப் பகுதியில் பிராணிகள் வேட்டையின் போது, தனது மைத்துனரான 43 வயது நோர் அஸுவார் ஜுயோ என்பவரைக் கவனக்குறைவாகத் துப்பாக்கியினால் சுட்டு மரணம் விளைவித்ததாக அந்த இறைச்சி வியாபாரி குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 304 ஆவது பிரவின் கீழ் அந்த இறைச்சி வியாபாரிக்கு எதிராக நோக்கமில்லா கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னதாக, உயிரிழந்த தனது மைத்துனரின் மரணத்தை மறைப்பதற்கு இறைச்சி வியாபாரியும், அவருடன் வேட்டையில் ஈடுபட்ட இதர நான்கு நபர்களும் மைத்துனரின் உடலை, பத்துகேவ்ஸிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரம் வரை கொண்டுச் சென்று பேரா, பகான் செராய், செமாங்கோல் என்ற இடத்தில் ஒரு பழைய சாலையோரத்தில் கைவிட்டு சென்றதாக பத்திரிகைத் தகவல்கள் கூறின.

Related News