அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.24-
கடந்த 2023-இல், கெடா மாநில முதல்வர் சனுசி நோரின் மீது அவதூறு கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், இன்று அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். கனிமங்கள் திருட்டு, அரசு நிதி முறைகேடு ஆகியவை தொடர்பான சைஃபுடினின் குற்றச்சாட்டுகள், சனுசியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக நீதிபதி ஜோஹான் லீ அப்துல்லா தீர்ப்பளித்தார். இதனால், சைஃபுடின் சனுசிக்கு 6 இலட்சம் ரிங்கிட் இழப்பீடும், 70 ஆயிரம் ரிங்கிட் வழக்குச் செலவும் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக சைஃபுடின் அறிவித்துள்ளார்.








