சைபர்ஜெயா, செப்டம்பர்.25-
வேப் மின் சிகரெட் விற்பனை, அடுத்த ஆண்டு மத்திய வாக்கில் தடை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
அந்த மின் சிகரெட் விற்பனையைத் தடை செய்வதில் சுகாதார அமைச்சு முழு கடப்பாட்டைக் கொண்டுள்ளது. எனினும் கட்டம், கட்டமாக அணுகுமுறையைக் கையாள வேண்டியுள்ளது என்ற அவர் விளக்கினார்.
அடுத்த ஆண்டு மத்திய வாக்கில் அல்லது இரண்டாவது அரையாண்டில் மின் சிகரெட் விற்பனைக்கு முடிவு கட்டப்படும் என்று டாக்டர் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.








