புத்ராஜெயா, ஜூலை.20-
வரும் ஜுலை 26 ஆம் தேதி கோலாலம்பூர் மாநகரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள துருன் அன்வார் பேரணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவார்களேயானால், அவர்களின் செயல் ருக்குன் நெகாராவின் கோட்பாட்டிற்கு முரணானதாகும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷம்சூல் அஸ்ரி அபு பக்கார் வலியுறுத்தியுள்ளார்.
அரசு ஊழியர்கள் எப்போதுமே மாமன்னருக்கும், அரசாங்கக் கொள்கைக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
அரசுப் பணியை ஏற்பதற்கு முன்பு, எத்தகைய நிலையிலும் மாமன்னருக்கும், நாட்டிற்கும் விசுவாசமாக இருப்போம் என்ற சத்தியப் பிரமாணம் செய்த பின்னரே தங்கள் பொறுப்பை ஏற்கின்றனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் இது போன்ற பேரணியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தாம் ஆலோசனை கூறுவதாக ஷம்சூல் அஸ்ரி நினைவுறுத்தியுள்ளார்.








