Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை கைவிடப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை கைவிடப்பட்டது

Share:

2024 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று ஜனவரி முதல் தேதி திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4.10 மணியளவில் ஜப்பானின் மேற்கு பகுதியில் இஷிக்காவா பிரதேசத்தில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்​ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்துற்கு பிறகு 50 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்த எட்டு பேர் மரணம் அடைந்து இருப்பதாகவும் பலர் காயமுற்றதகாவும் கூறப்படுகிறது.

45 ஆயிரத்திற்கும்​ மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் எதிரொலியாக 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் நிலநடுக்கத்​தினால் வெளியிடப்பட்ட உயர் மட்ட சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு அரசாங்கம் பின்னர் கைவிட்டது. கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப ​வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

அதேபோன்று அசம்பாவிதங்களை தடுக்க ஜப்பான் அரசாங்கம் ​​தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து