Jun 28, 2026
Thisaigal NewsYouTube
72 வயது பினாங்கு மூதாட்டிக்கு அடித்த ஜாக்பாட் - டோட்டோவில் 40 மில்லியன் ரிங்கிட் வென்றார்
தற்போதைய செய்திகள்

72 வயது பினாங்கு மூதாட்டிக்கு அடித்த ஜாக்பாட் - டோட்டோவில் 40 மில்லியன் ரிங்கிட் வென்றார்

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.02-

பினாங்கைச் சேர்ந்த 72 வயது இல்லத்தரசி ஒருவர், 'அதிர்ஷ்டத் தேர்வு' சீட்டில் பந்தயம் கட்டி, சுப்ரீம் டோட்டோ ஜாக்பாட்டில், 40.1 மில்லியன் ரிங்கிட்டை வென்றுள்ளார்.

கடந்த 1980-ஆம் ஆண்டு முதல், மளிகைப் பொருட்கள் வாங்கச் செல்லும் வேளையில், விளையாட்டாக டோட்டோவில் பந்தையம் கட்டி வரும் அவர், இம்முறை தான் வெற்றியடைந்த மிகப் பெரிய தொகையை கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என்று ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வெற்றி பெற்றத் தொகையை என்ன செய்வது என்பது குறித்து தானும், தனது கணவரும் இன்னும் திட்டமிடவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மிக கவனமாக அதனைக் கையாளப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

சீனப் புத்தாண்டு நெருங்கி வரும் வேளையில், தமக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைத்திருப்பது குறித்து பெரிதும் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News