Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பக்காத்தானை மக்கள் தண்டித்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

பக்காத்தானை மக்கள் தண்டித்துள்ளனர்

Share:

6 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி சிறப்பான அடைவுநிலையை பெறமுடியாமல் போனதிற்கு அக்கூட்டணியை மக்கள் தண்டித்துள்ளனர் என்று பிகேஆர் எம்.பி ஹாசன் கரின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அனைத்து மாநில மக்களுக்கும் நியாயமான நிதி ஒதிக்கீட்டை வழங்க தவறியதற்காக நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என்று பாசிர் கூடாங் எம்.பி -யான ஹாசன் கரின் குறிப்பிட்டுள்ளார்.

எல்லா மாநிலங்களுக்கும் அரசியல் வேறுபாடுயின்றி நியாயமான மானியத்தையும் நிதி ஒதுக்கீட்டையும் வழங்க வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு பக்காத்தான் ஹரப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்றியது முதல் தாம் வலியுறுத்தி வந்ததாக ஹாசன் கரின் சுட்டிக் காட்டினார்.

Related News