Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர் மனங்களில் நினைவுகூரப்படுவர்
தற்போதைய செய்திகள்

மலேசியர் மனங்களில் நினைவுகூரப்படுவர்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 02-

பாரிஸ் ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மகளிர் இரட்டையர் பிரிவின் அரையிறுதியாட்டத்தில் தேசிய மகளிர் இரட்டையர் இணை சீனாவிடம் தோல்விக் கண்டனர்.

தேசிய மகளிர் இரட்டையர்களான பேர்லி டான் - எம்.தினா உலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் சீனாவின் சென் க்கிங் சென் - ஜியா இ பேன்-யை எதிர் கொண்டனர்.

இவ்வாட்டம் மலேசிய நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2.30க்கு தொடங்கியது.

20 நிமிடங்களில் நீடித்த முதல் சுற்று ஆட்டத்தில் பேர்லி டான் - எம்.தினா இணை 21-12 என்ற புள்ளியில் சீன இணையிடம் வீழ்ந்தது.

முதல் செட்டைக் கைப்பற்றத் தவறியத் தேசிய மகளிர் அணி இரண்டாவது செட்டை 21-18 என்ற புள்ளியில் சீன அணியை வென்றது.

வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சீனாவின் சென் க்கிங் சென் - ஜியா இ பேன் இணை 21-15 என்ற புள்ளி கணக்கில் மலேசிய அணியை வென்றது.

மொத்தம் 78 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் சீனாவின் சென் க்கிங் சென் - ஜியா இ பேன் இணை 21-12, 21-18, 21- 15 என்ற புள்ளிக்கணக்கில் மலேசிய இணை போராடி தோற்றது.

உலகத் தரவரிசையில் 13-ஆவது இடத்திலுள்ள நாட்டின் தேசிய மகளிர் இரட்டையர்களான பேர்லி டான் - எம்.தினா இணை தோல்வி, மலேசியர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவ்விரு வீராங்கனைகளும் கண்ணீருடன் அரங்கை விட்டு வெளியேறினர்.

எனினும் மலேசிய வரலாற்றில் ஒலிம்பிக் பூப்பந்துப் போட்டியில் அரையிறுதி சுற்று வரை முன்னேறிய பேர்லி டான் - எம்.தினா இணை, மலேசியர்கள் மத்தியில் என்னெற்றும் நினைவுகூரப்படுவர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை