சிரம்பான், செப்டம்பர்.06-
எதிர்வரும் செப்டம்பர் 11-ம் தேதி, மலேசியா-ஆஸ்திரேலியா இடையிலான இரு தரப்புச் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான்.
இக்கூட்டம் வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் வட்டாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து முகமட் ஹசான் கூறுகையில், மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் யுனைடட் கிங்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கும் ஃஎப்பிடிஏ FPDA என்ற பாதுகாப்பு அம்சத்தை இது மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.








