Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மழைக்காலத்தில் தீயணைப்பு – மீட்புப் படையினரின் விடுமுறைக்குத் தடை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மழைக்காலத்தில் தீயணைப்பு – மீட்புப் படையினரின் விடுமுறைக்குத் தடை

நவ. 24-

தென் கிழக்கு மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, மலேசியத் தீயணைப்பு மீட்புப் படையின் ஐந்து மாநிலங்களில் உள்ள ஏறத்தாழ 6000 ஊழியர்கள் விடுமுறைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திரங்கானு, கிளாந்தான், பகாங், ஜோகூர், சரவாக் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 27 , 28, டிசம்பர் 15, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மலேசியத் தீயணைப்பு – மீட்புப் படையின் தலைமை இயக்குநர் Datuk Nor Hisham Mohammad தெரிவித்தார்.

இந்த மாநிலங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் 20 விழுக்காடு ஊழியர்களின் விடுமுறைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மீதமுள்ள ஊழியர்களின் விடுமுறைக்கும் தடை விதிக்கப்படும் என்றார்.

வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள தயாராக இருக்க, தீயணைப்பு – மீட்புப் படை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில், அவசரகால குழுக்களை உருவாக்குதல், அவசியமான கருவிகளைத் தயார் செய்தல் போன்றவயும் அடங்கும் என Nor Hisham குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →