Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிகரெட் புகைத்ததால் உணவகத்தில் சண்டை
தற்போதைய செய்திகள்

சிகரெட் புகைத்ததால் உணவகத்தில் சண்டை

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.15-

உணவகத்தில் நிகழ்ந்த சண்டை தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உணவகத்தில் புகை பிடிக்கக்கூடாது என கூறியதால் கோபமடைந்த நபர் ஒருவர் கர்ப்பிணி மனைவியுடன் அமர்ந்திருந்த ஆடவருடன் சண்டையிட்டுள்ளார் என்று ஷாஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் ஷா ஆலாம், செக்‌ஷன் 13 உள்ள பிரபல உணவகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு 11.50 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக அந்த தம்பதியரிடமிருந்து போலீசார் புகார் ஒன்றைப் பெற்றுள்ளனர். சண்டை தொடர்பான காணொளி, சமூக ஊடகங்களில் மறுநாள் மதியம் 1.45 மணிக்குப் பரவியது.

இச்சண்டை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக ஏசிபி முகமட் இக்பால் மேலும் கூறினார்.

Related News