Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சித்தி மஸ்துரா மீது வெகு விரைவில் திரேசா கோக் சட்ட நடவடிக்கை எடுப்பார் !
தற்போதைய செய்திகள்

சித்தி மஸ்துரா மீது வெகு விரைவில் திரேசா கோக் சட்ட நடவடிக்கை எடுப்பார் !

Share:

கெப்பாளா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் ஜசெக வின் இரண்டாவது நபராகிறார் திரேசா கோக்.

வெகு விரைவில் சித்தி மஸ்துராவை நீதிமன்றத்தில் சந்திக்க இருப்பதாக செபுத்தே நாடாளுமன்ற உருப்பினரான திரேசா கோக் குறிப்பிட்டார்.

சித்தி மஸ்துரா வெளியிட்ட கருத்தை மீட்டுக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கடந்த நவம்பர் 10 ஆம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்ட திரேசா கோக், சித்தி மஸ்துராவுக்குக் கொடுக்கப்பட்டக் கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது எனவும் தெரிவித்தார்.

ஆனால், இப்போது வரையிலும் சித்தி மஸ்துரா தமது கூற்றை மீட்டுக் கொள்ளவோ அல்லது மன்னிப்புக் கேட்கவோ இல்லை என செய்தியாளர் சந்திப்பில் திஏசா கோக் கூறினார். அந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர், பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யங் ஷெஃபுரா ஆகியோர் உடன் இருந்தனர்.

தமது கூற்றை மீட்டுக் கொள்வதோடு சித்தி மஸ்துரா 10 மில்லியன் வெள்ளியை இழப்பீடாகச் செலுத்த வேண்டும் எனவும் தமது நோட்டீசில் திரேசா கோக் குறிப்பிட்டிருந்தார்.

Related News