மோசடி குற்றங்களை தடுக்கும் வகையில் கடுமையான தண்டனைகளை விதிக்க குற்றவியல் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் செய்ய வேண்டும் என பெர்சாத்து கட்சியின் இணை பிரிவு இடைக்காலத் தலைவர் ஆர். ஸ்ரீ சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.
மோசடி தொடர்பான வழக்குகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் குற்றவியல் சட்டப்பிரிவு 420, தற்போதைய டிஜிட்டல் மோசடிகள் மற்றும் இணைய குற்றங்களுக்கு தெளிவான மற்றும் முழுமையான வரையறைகளை வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், மலேசியர்கள் மோசடி கும்பல்களுக்குப் பலியாகி, தங்கள் வாழ்நாள் சேமிப்பு, எதிர்காலம் மற்றும் நிறுவன அமைப்புகளின் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது, இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.








