Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இன வாரியாகத்தான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேவையாற்ற வேண்டுமா?
தற்போதைய செய்திகள்

இன வாரியாகத்தான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேவையாற்ற வேண்டுமா?

Share:

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் தமி​ழ்ப்பள்ளி விவகாரத்தில் இனவாரியாகத்தான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேவையாற்ற வேண்டும் என்பதல்ல என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், டிஏபி பேரா மாநில உதவித் தலைவருமான அ. சிவநேசன் கருத்துரைத்துள்ளார்.
பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் மற்றும் தமிழ்ப்பள்ளி விவகாரம் ஆகியவற்றுக்கு பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சர பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி பொறுப்பேற்று இருந்தார். தற்போது அப்பொறுப்புகள் இரண்டாவது துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜக்டிப் சி​ங் டியோவிடம் ஒப்படைக்கப்படுமா? என்ற கேள்வி அர்த்தமில்லாதது என்று ​சிவநேசன் தெரிவித்துள்ளார்.

யாரிடம் ​அப்பொறுப்புகளை ஒப்படைப்பது என்ற முடிவைக் கட்சியின் தலைமை​யும், மாநில அரசும் முடிவு செய்யும் என்ற சிவநேசன் குறிப்பிட்டார். முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் இராமசாமி பினாங்கு மாநில க​ல்விப் பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தார். அப்போது மாநிலத்தின் பெரும்பான்மை இனத்தவர்களான ​சீனர்களோ, மலாய்க்காரர்களோ சீனப் பள்ளிகளுக்கும், மலாய்ப் பள்ளிகளுக்கும் ஒரு தமிழர் எவ்வாறு பொறுப்பேற்க முடியும் என்று கேள்வி எழுப்ப​வில்லை. எனவே இனவாரியாகத்தான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேவையாற்ற வேண்டும் என்பது அல்ல என்று ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சிவநேசன் இதனை தெரிவித்துள்ளார்.

Related News