Mar 12, 2026
Thisaigal NewsYouTube
விளையாட்டு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதித் தேவை
தற்போதைய செய்திகள்

விளையாட்டு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதித் தேவை

Share:

சிலாங்கூர் மாநிலத்தின் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த அதிக மானியத் தேவை இருப்பதை, இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு ஒப்புக்கொள்வதாக துணை அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

பல கட்டிடங்களுக்கு முழு கவனம் தேவைப்படுவதாகவும், மக்களின் தொடர்ச்சியான வருகைகளின் பின்னர் மோசமான நிலையில் இருப்பதாகவும், இதனை மேம்படுத்துவதற்கு அதிக அளவிலான மானியம் தேவைப்படுவதாகவும் அடாம் அட்லி குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் சில மோசமான விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு மடாணி அரசு திட்டமிட்டுள்ளது குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவின் கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர் அடாம் அட்லி இவ்வாறு கூறினார்.

Related News