சிபு, செப்டம்பர்.20-
பிணியைப் போக்குவதாகக் கூறிய ஒரு மாந்திரீகவாதியான போமோவிடம் மூதாட்டி ஒருவர், 60 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை இழந்தார்.
சரவாக், சிபுவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டியிடம், சீன மருந்துக் கடையின் முகவரியைக் கேட்டு அணுகிய பெண் மாந்திரீகவாதி ஒருவர், பின்னர் அவரின் கையாட்கள் என்று நம்பப்படும் மேலும் இரண்டு பெண்களின் உதவியுடன் அந்த மூதாட்டியைக் காரில் அழைத்து சென்று ஏமாற்றியுள்ளனர்.
பிணியைப் போக்க மாந்திரீகச் சடங்கு செய்து கொள்ளவில்லை என்றால் அது குடும்ப உறுப்பினர்களுக்குச் சாபமாக மாறிவிடும் என்று மிரட்டிய அந்த மூன்று பெண்கள், பின்னர் அந்த மூதாட்டியிடம் நயமாகப் பேசி ரொக்கப் பணத்தையும், நகைகளையும் பறித்து சென்றுள்ளனர் என்று சிபு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஸுல்கிப்லி சுஹைலி தெரிவித்தார்.
அந்த மூன்று பெண்களும் சீனப் பிரஜைகள் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








