Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம், ஆடவருக்கு 15 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம், ஆடவருக்கு 15 ஆண்டு சிறை

Share:

தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் நன்கு அறிமுகமான 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு கிள்ளான், செஷன்ஸ நீதிமன்றம் இன்று 15 ஆண்டு சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படித் தண்டனையும் விதிக்க தீர்ப்பு அளித்தது.

முஹமாட் சைனோல் ஹஃபிஸ் முஹமாட் அஸ்மி என்ற 26 வயதுடைய அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்களை எழுப்புவதில் எதிர்தரப்பு வழக்கறிஞர் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து குற்றவாளிக்கு சிறையும், பிரம்படித் தண்டனையும் விதிப்பதாக நீதிபதி சஹ்ஃபீரா முஹமாட் சாயிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

சம்பந்தபட்ட நபர், கடந்த ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி அதிகாலையில் தஞ்சோங் காராங் சாவா செம்பெடான், என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குடும்பத் தலைவர் என்ற முறையில் சிறார்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் சம்பந்தப்பட்ட நபர் இருந்தும், வக்கிரத் தன்மையுடன் செயல்பட்டது தண்டிக்கத் தக்கதாகும் என்று நீதிபதி ஷஃபீரா முஹமாட் சாயிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

பாலியல் பலாத்காரம், ஆடவருக்கு 15 ஆண்டு சிறை | Thisaigal News