Oct 11, 2026
Thisaigal NewsYouTube

50 ஆண்டு கால ஆமை மடிந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
50 ஆண்டு கால ஆமை மடிந்தது

போர்ட்டிக்சன், மே.28-

போர்ட்டிக்சன், தெலுக் கெமாங் கடற்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கடற்கன்னியைப் போல் காத்து வந்ததாக நம்பப்படும் ஓர் ஆமை மடிந்தது, அப்பகுதியில் உள்ள மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

100 கிலோ எடைக் கொண்ட அந்த பெண் ஆமை, கடந்த சனிக்கிழமை காலை 8 மணியளவில் போர்ட்டிக்சன் கடற்பகுதியில், கரை ஒதுங்கிய நிலையில் இறந்து கிடந்தது, பொது மக்களால் கண்டு பிடிக்கப்பட்டு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில மீன்வளத்துறையின் இயக்குநர் காசிம் தாவே தெரிவித்தார்.

அந்த ஆமையின் நடமாட்டத்தை போர்ட்டிக்சன் பகுதியில் உள்ள மீனவர்களும் பல ஆண்டு காலமாகப் பார்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர் என்று காசிம் குறிப்பிட்டார்.

எனினும் அந்த ராட்ஷச ஆமை எந்த மாநிலத்திலிருந்து போர்ட்டிக்சன் கடற்பகுதிக்கு வந்துள்ளது என்பதைத் தங்களால் உறுதிப்படுத்த இயலவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை