ஈப்போ, அக்டோபர்.04-
தைப்பிங்கில் நேற்று பெய்த கனமழையினால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், சுமார் 210 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாமான் காயா பல்நோக்கு மண்டபம், எஸ்கே சிம்பாங், எஸ்கே மாத்தாங் மற்றும் எஸ்கே மாத்தாங் கெலுகோர் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம், தாமான் பெங்காலான் மக்மோர், தாமான் பெங்காலான் செத்தியா உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள வீடுகளில் புகுந்ததால், அப்பகுதி மக்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், இன்று அக்டோபர் 4-ஆம் தேதி, உலு பேராக், கோல கங்சார் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








