கோலாலம்பூர், அக்டோபர்.23-
அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், மலேசிய வருகையின் போது, தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவிக்க நோக்கம் கொண்டுள்ளவர்கள், 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறும் மையப் பகுதியான கேஎல்சிசியின் முன் ஒன்று கூட வேண்டாம் என்று போலீசார் இன்று அறிவுறுத்தியுள்ளனர்.
ஆசியான் மாநாட்டின் மையப் பகுதியான கோலாலம்பூரின் நில அடையாளத்தைத் தாங்கிய அப்பகுதி, உலகத் தலைவர்களின் பாதுகாப்புக்குரிய வளையமாகும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் தோற்றத்தைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் ஒன்று கூட வேண்டாம் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
அப்படி ஆட்சேபம் தெரிவிக்க நோக்கம் கொண்டுள்ளவர்கள், கோலாலம்பூரின் மற்றொரு பகுதியான பாடாங் மெர்போக்கைத் தேர்வு செய்யலாம் என்று ஐஜிபி அறிவுறுத்தியுள்ளார்.








