Jul 1, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டில் பணத்கை குவித்து வைத்துள்ளேனா? ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள்": அன்வார் பதிலடி
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டில் பணத்கை குவித்து வைத்துள்ளேனா? ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள்": அன்வார் பதிலடி

Share:

தமது வெளிநாட்டுப் பண இருப்பு குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஜோகூர் பாருவில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய பிரதமர், இத்தகைய புகார்களைத் தாம் ஒருபோதும் பொருட்படுத்தப் போவதில்லை என்றும், குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் அதற்குரிய வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும் சவால் விடுத்தார்.

யாராக இருந்தாலும் சட்டத்திற்கு மேலானவர்கள் கிடையாது எனக் குறிப்பிட்ட பிரதமர், ஆதாரங்கள் இன்றி பரப்பப்படும் வதந்திகளுக்குப் பதில் அளிக்கத் தமக்கு நேரமில்லை என்றார்.

முன்னதாக, பிரதமரின் முன்னாள் அதிகாரி ஒருவரைத் தொடர்புபடுத்தி வீடியோ ஒன்றில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்துப் பெர்சத்து கட்சி விசாரணை கோரியிருந்த நிலையில், பிரதமர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை