பச்சரிசி விநியோகத்தில் நிலவிவரும் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு 10 கிலோ அரிசிக்கான உச்சவரம்பு விலையை 34 வெள்ளிக்கு உயர்த்தம்படி அரசாங்கத்திற்கு பிரபல மொத்த வியாபாரத் தளமான மைடின் பேரங்காடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமீர் அலி மைடின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது 10 கிலோ உள்ளூர் பச்சரிசியின் உச்சவரம்பு விலை, மிகக்குறைவாக 26 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசியை உற்பத்தி செய்ய உள்ளூர் அரிசி ஆலை முதலாளிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்று அமிர் அலி மைடின் கூறுகிறார்.
உச்சவரம்பு விலையை உயர்த்தினால் மட்டமே அரிசி உற்பத்தியாளர்களின் செலவின நடைமுறைகள் சீரடையும். இதனால், அரிசி பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அது உதவியாக இருக்கும் என்று அவர் பரிந்துரை செய்துள்ளார்.
10 கிலோ பச்சரிசி விலையை 26 வெள்ளியாக நிர்ணயித்து, அந்த விலையை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்தால் அவ்வகை அரிசி விநியோகத் தட்டுப்பட்டிற்கு அது தீர்வாகாது என்பதையும் அமிர் அலி மைடின் வலியுறுத்தியுள்ளார்.








