கோலாலம்பூர், டிசம்பர்.29-
தன்னை வீட்டுக்காவலில் வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரஸாக், அதிகாரப்பூர்வமாக புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து கடந்த புதன்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதை நஜீப்பின் வழக்கறிஞர் முஹமட் ஃபார்ஹான் முஹமட் ஷாஃபி இன்று உறுதிப்படுத்தினார்.
முன்னதாக கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி, நஜீப்பை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் "கூடுதல் அரச ஆணை" செல்லுபடியாகாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஏலிஸ் லோக் தீர்ப்பளித்தார். அந்த ஆணை மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் முறையாக விவாதிக்கப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதால், அது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமல்படுத்த முடியாத ஒன்று என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
72 வயதான நஜீப் தற்போது எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் தனது 6 ஆண்டு காலச் சிறைத் தண்டனையை காஜாங் சிறையில் அனுபவித்து வருகிறார்.








