Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தொழிலாளர்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தொழிலாளர்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

கோலாலம்பூர், நவ. 26-


நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 90 லட்சம் தொழிலாளர்கள், அடுத்த ஆண்டு முற்பகுதியில் 24 மணி நேர சொக்சோ பாதுகாப்பு சலுகையை பெறவிருக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு நாள் முழுவதும் பாதுகாப்பு வழங்க வல்ல, சொக்சோவின் தொழிலாளர் பேரிடர் திட்ட சலுகையை விரிவுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் வியூக, நிறுவன துணை தலைமை செயல்முறை அதிகாரி எட்மண்ட் சியோங் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு குறிப்பாக சொக்சோ சந்தாதாரர்களுக்கு 24 பாதுகாப்பு சலுகை வழங்குவதற்கு ஏதுவாக சொக்சோ சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் செய்யவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பணியிட வேலைக்கும், வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட நிலையிலும் வேலைக்கு தொடர்பு இல்லாத பணிகளிலும் அனைத்து வகையான விபத்துகளுக்கும் இந்த சலுகை பாதுகாப்பு அளிக்கிறது. இதில் வெளியூர் பயணங்களும் உள்ளடக்கமாகும் என்று எட்மண்ட் சியோங் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →