சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்த பெர்டோடுவா பேசா காரை தடுத்து நிறுத்தும் முயற்சி தோல்வி கண்டதை தொடர்ந்து அந்த காரை போலீசார் சைபெர்ஜெயா- விலிருந்து பெத்தாலிங் ஜெயா வரை விரட்டி சென்று ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் வளைத்துப் பிடித்தனர்.
இச்சம்பவத்தில் காரில் இருந்த மேலும் இருவர் தப்பி சென்றனர். போலீசார் துரத்தும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
அந்த காரை போலீசாரின் ஒன்பது எம்பிவி ரோந்து கார்கள் துரத்திக் கொண்டு செல்வதை காண முடிந்தது. பெட்டாலிங் ஜெயாவில் அக்காரை தடுத்து நிறுத்துவதில் வெற்றிக் கண்ட போலீசார் காரில் இருந்த நால்வரை பிடிக்க முயற்சியின் போது இருவர் தப்பி சென்றனர்.
இச்சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட கும்பல் வீடு புகுந்து கொல்லையிடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுவதால் பிடிப்பட்ட ஆணையும் பெண்ணையும் போலீசார் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


