கோத்தா திங்கி, நவம்பர்.03-
ஜோகூர், கோத்தா திங்கியில் பூர்வக்குடி கிராமம் உட்பட உள்ளூர்வாசிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அளவிற்கு ஜோகூர் ஆற்றில் ஏற்பட்டுள்ள தூய்மைக்கேடு தொடர்பில் போலீசார் இதுவரை 3 புகார்களைப் பெற்றுள்ளனர்.
இரண்டு புகார்கள், உள்ளூர் கிராம மக்களும், ஒரு புகார், ஜோகூர் மாநிலத்தில் நீர் விநியோகிப்புச் சேவையை வழங்கி வரும் பிரதான நிறுவனமான Runhill SAJ Sdn. Bhd அளித்து இருப்பதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்தார்.
ஜோகூர் ஆற்று நீர் பால் போன்ற நிறத்தில் மாசடைந்ததன் காரணமாக உள்ளூரைச் சேர்ந்த சுமார் 150 மீனவர்கள் மீன்பிடித் தொழிலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். உள்ளுர் மக்களுக்கு டேங்கர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.








