கோலாலம்பூர், ஆகஸ்ட்.13-
வருமான வரியை முறையாகச் செலுத்தத் தவறியவர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படும் என்று மலேசிய உள்நாட்டு வருமான வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. வருமான வரி, சொத்து இலாப வரி அல்லது நிறுவன வரிகளில் நிலுவை வைத்திருக்கும் தனிநபர்கள் அல்லது நிறுவன இயக்குநர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்படும் என உள்நாட்டு வருவாய் வாரியத்தின் (LHDN) வருவாய் வசூல் துறை உதவி இயக்குநர் அஸாஹாருடின் முகமட் அலி கூறியுள்ளார்.
இந்தத் தடை, வருமான வரிச் சட்டம் 1967-இன் பிரிவு 104-இன் கீழ் விதிக்கப்படும் என்றும், இருப்பினும் உடனடியாகத் தடை விதிக்கப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிடும் முன்னர், குடிநுழவுத்துறை அல்லது மைடேக்ஸ் MyTax இணையதளத்தில் பயணத் தடை நிலையைச் சரிபார்க்க வேண்டும் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








